ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
WATCH LIVE @ Facebook
ஒரு குழந்தை எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் விழாவின் இறுதியில் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றிபெற்ற படைப்புகளின் காணொளிகள் விழாவில் ஒளிபரப்பப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் 3 பிரிவுகள் உள்ளது. குழந்தையின் வயதிற்கு ஏற்ப ஒரு பிரிவில் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
முதல் பிரிவு - 6 வயதிற்குக் கீழ் (01/14/2015-குப் பிறகு பிறந்த குழந்தைகள்)
இரண்டாம் பிரிவு - 6 முதல் 10 வயது வரை (01/14/2011-குப் பிறகும் 01/14/2015-க்கு முன்னும் பிறந்த குழந்தைகள்)
மூன்றாம் பிரிவு - 10 வயதிற்கு மேல் (01/14/2011-க்கு முன் பிறந்த குழந்தைகள்)
ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு - $101 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
இரண்டாம் பரிசு - $50 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
மூன்றாம் பரிசு - $25 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள்
ஒரு திருக்குறளின் பொருளை உள்ளடக்கிய ஓவியத்திற்கான ஓவியப் போட்டி.
ஓவியத்தையும், குழந்தைகள் அக்குறளின் பொருளையும் ஓவியத்தையும் விளக்கிக் கூறும் காணொளியையும் நுழைவுப் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு ஓவியத்தை வரையலாம். இப்போட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளலாம்.
விதிமுறைகள்:
வண்ண ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுதுகோல் ஓவியங்களும் (Pencil sketches) வரவேற்கப்படும்.
A4 அல்லது அதன் அளவிற்கு மேல் உள்ள காகிதத்தில் வரைதல் அவசியம்.
திருக்குறளின் வரிகளை ஓவியத்தின் கீழ்ப்பகுதியிலோ அல்லது மேற்பகுதியிலோ எழுதியிருக்கவேண்டும்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
விருந்தோம்பல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் ஒரு மிகப் பெரிய அங்கம். அது தமிழர்களின் பெருமையும் ஆகும்.
அதனை மிகவும் ஆழமாகவும் சிறப்பாகவும் பறைசாற்றும் வண்ணம் ஓவியங்களை வரைதல் இப்போட்டியின் நோக்கமாகும்.
உணவு, வரவேற்பு, கலந்துரையாடல், மரியாதை, அன்பு, கவனிப்பு என விருந்தோம்பல் சார்ந்த எதைப்பற்றியும் இருக்கலாம்.
ஓவியத்தையும், குழந்தைகள் ஓவியத்தையும் விளக்கிக் கூறும் காணொளியையும் நுழைவுப் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.
குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு ஓவியத்தை வரையலாம். இப்போட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்துகொள்ளலாம்.
விதிமுறைகள்:
வண்ண ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுதுகோல் ஓவியங்களும் (Pencil sketches) வரவேற்கப்படும்.
A4 அல்லது அதன் அளவிற்கு மேல் உள்ள காகிதத்தில் வரைதல் அவசியம்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
குழந்தைகளுக்கான தனித்திறன் போட்டி. தமிழ் மரபு சார்ந்த கலைகள் (பறை, சிலம்பம், கொம்பு, தமிழிசை), மற்றும் மேற்கத்தியக் கருவிகள் கொண்டு தமிழ்ப் பாடல் அல்லது இசைத்தல். தமிழ் மரபு சார்ந்த திறமைகள் வேறு எதுவாக இருப்பினும் வரவேற்கப்படும்.
முதல் பிரிவு: குறைந்தது 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு: குறைந்தது 1 முதல் 2 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
காணொளிகள் பிற மொழி கலக்காத தூய தமிழில் இருத்தல் வேண்டும்.
குழந்தைகள் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசும் போட்டி.
குறைந்தது 1 முதல் 2 நிமிடங்கள் வரையிலான காணொளியாகப் பதிவு செய்து அனுப்பிவைக்கவும்.
தமிழை ஆளும் குட்டித் தமிழச்சியோடு குழந்தைகளின் உரையாடல்.