ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அம்மாணவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்கள் மீண்டும் பள்ளிப் படிப்பினைத் தொடர ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 300 மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வியைப் பரப்புவதற்கான உன்னதமான காரணத்திற்காக உங்கள் தாராளமான பங்களிப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
செலவின சுருக்க அறிக்கை
2023 - வறிய மாணவர்களை தத்தெடுத்தல் வலைஒளி பக்கத்தின் மூலம் இந்த விநியோகத்தின் போது நடந்த அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் தேவைப்படும் மாணவர்களிடையே கல்வியை அறிவூட்டுவதற்கு உங்களுடன் இணைந்து எங்களுடன் கைகோர்த்த திண்ணை அறக்கட்டளைக்கும் மிக்க நன்றி.
தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மூன்று கிராமப்புறப் பாடசாலைகளில் (வீரச்சோலை அ.த.க பாடசாலை, ஹோலி குறோஸ் ம.வி, நாமகள் வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 88 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள், பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான பயிர்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஹோலி குரோஸ் மகா வித்தியாலயம் பாடசாலை
வீரச்சோலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
நாமகள் வித்தியாலயம் பாடசாலை