ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
தமிழீழத்தில் (இலங்கையில்) அரசியல் மற்றும் பொருளாதாரம் சரிவடைந்ததன் காரணமாகவும், இயற்கை பேரிடரின் காரணமாகவும் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகப் பகுதியில், குறிப்பாக பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக் குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு 21 நாட்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, சோயா, மிளகாய், உப்பு, பிஸ்கட், நூடில்ஸ் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் தலைமையில் வழங்கப்பட்டது. (இந்த 110 குடும்பங்களும் தொட்டுவாகலை தோட்டக் குடியிருப்பில் மண் சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
இதற்காக நன்கொடை அளித்த அனைத்து அமெரிக்கா வாழ் தமிழ் நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!